போராடிய நியூசிலாந்து அணி வீரர்கள்: 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
நியூசிலாந்து எதிரான 5வது டி20 போட்டியில் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த இந்தியா
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ஓட்டங்களிலும், அபிஷேக் சர்மா 30 ஓட்டங்களிலும் வெளியேறினாலும் பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - சூர்யகுமார் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
A fantastic finish to the T20I series in Trivandrum 🏟️🥳#TeamIndia register a 46-run victory and win the T20I series 4⃣-1⃣ 👏👏
— BCCI (@BCCI) January 31, 2026
Scorecard ▶️ https://t.co/AwZfWUTBGi#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/SktrGoq0Dp
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் விளாசி 103 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
மறுமுனையில் சூர்யகுமார் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 63 ஓட்டங்களும், பாண்டியா 17 பந்துகளில் 42 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி அபார வெற்றி
272 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்கரரான டிம் சீஃபர்ட் 5 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி தந்தார்.
Finn Allen brings up his 6th T20I half-century off 22 balls - the fastest by any New Zealander against India 💪#INDvNZ | 📸 BCCI pic.twitter.com/B3HcHg6a0Y
— BLACKCAPS (@BLACKCAPS) January 31, 2026
ஆனால் சிறப்பாக விளையாடிய மற்றொரு ஆட்டக்காரரான ஃபின் ஆலன் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் விளாசி 80 ஓட்டங்கள் குவித்தார்.
மேலும் ரச்சின் ரவீந்தரா 30 ஓட்டங்களும், இஷ் சோதி 33 ஓட்டங்களும் குவித்து அணியை தோல்வியில் இருந்து மீட்க போராடினர்.
𝙏𝙝𝙖𝙩 𝙬𝙞𝙣𝙣𝙞𝙣𝙜 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜! 🏆#TeamIndia Captain Surya Kumar Yadav receives the @IDFCFIRSTBank T20I Series trophy from BCCI President Mr. Mithun Manhas 👏👏#INDvNZ | @MithunManhas | @surya_14kumar pic.twitter.com/6n2sP1D6TR
— BCCI (@BCCI) January 31, 2026
இருப்பினும் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதன் மூலம் இந்திய அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதுடன், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |