பார்வையற்ற பெண்களுக்கான T20 உலகக்கோப்பை - சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா
பெண்களுக்கான பார்வையற்றோர் T20 உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
பார்வையற்ற பெண்களுக்கான T20 உலகக் கோப்பை
பார்வையற்ற பெண்களுக்கான முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் கடந்த நவம்பர் 11ஆம் தேதி டெல்லியில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன.
இதில் இன்று கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் நேபாள அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய நேபாள அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்கள் குவித்தது.
கோப்பை வென்ற இந்தியா
115 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 12.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இதன் மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, பார்வையற்ற பெண்களுக்கான முதல் T20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.

22 பந்துகளில், 44 ஓட்டங்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்களித்த பூலா சரேன் ஆட்ட நாயகி விருது பெற்றுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |