ஆசிய விளையாட்டு போட்டி கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா
india won gold by beat pakistan by 19runs: ஆசிய விளையாட்டு போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்றுள்ளது.
பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக இந்தியா தரப்பில் அதிரடியாக ஆடி, அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 61 ஓட்டங்கள் குவித்தார். திலக் வர்மா 51 ஓட்டங்கள் குவித்தார்.

212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192ஓட்டங்கள் மட்டுமே குவித்தது .
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 96 ஓட்டங்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதன் மூலம், 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கம் வென்றுள்ளது.
ஏற்கனவே மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது.