ஆஸ்கார் 2023: சிறந்த ஆவணக் குறும்படம், சிறந்த பாடல் ஆகிய பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த விருது!
ஆஸ்கார் 2023 விருது விழாவில் ”The Elephant Whisperers” என்ற ஆவணக் குறும்படம் சிறந்த ஆவணக் குறும்படம் என்ற விருதைப் பெற்று அசத்தியுள்ளது.
ஆஸ்கார் விருது
2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று அதிகாலையில் துவங்கியது. இந்த நிலையில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதை இந்தியாவில் எடுக்க பட்ட "The Elephant Whisperers" என்ற திரைப்படம் பெற்றுள்ளது.
@netflix
கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இக்குறும்படம் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவையும், இயற்கையை நாம் நேசிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியது. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பதற்கு இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
@netflix
இந்த படத்தை கார்த்திகிகோன் சால்வெஸ்(Kartiki Gonsalves) என்ற இயக்குநர் இயக்கியுள்ளார். இந்த படம் Haul out, How Do You Measure a Year?, The Martha Mitchell Effect and Stranger at the Gate போன்ற படங்களோடு தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.
சிறந்த பாடல்
விருதைப் பெற்ற கார்த்திகி “நமக்கும் நமது இயற்கை உலகத்துக்கும் இடையே உள்ள புனிதமான பிணைப்புக்காகவும், பழங்குடி சமூகங்களின் மரியாதைக்காகவும், மற்ற உயிரினங்களின் மீது அன்பு காட்டுவதற்காகவும், இறுதியாக சக உயிரினங்களின் வாழ்வுக்காகவும் பேசுவதற்காக நான் இன்று இங்கு நிற்கிறேன்,” என்று கோன்சால்வ்ஸ் தனது ஏற்பு உரையில் கூறியுள்ளார்.
@twitter
இதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கிய RRR படம் சிறந்த பாடலுக்கான விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக கீரவானி மற்றும் சந்திர போஸ்க்கு சிறந்த பாடலுக்கான விருது கொடுக்கப்பட்டது.
@twitter
நீண்ட நாட்களுக்குப் பிறகு இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்திய திரைத்துறை நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிய சாதனையைப் படைத்துள்ளது.