பாகிஸ்தானை வீழ்த்தி 10வது முறையாக SAFF சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா
india won saff title 10th time by beat pakistan: வங்கதேசத்தில் நடைபெற்ற SAFF சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய கால்பந்து அணி பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 10வது முறையாக SAFF சாம்பியன் பட்டம் வென்றது.
10வது முறையாக SAFF சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா
6 அணிகள் பங்குபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர், நவம்பர் 5 ஆம் திகதி நவம்பர் 17 ஆம் திகதி வரை வங்கதேசத்தில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான் கால்பந்து அணியை எதிர்கொண்டது.

முதல் பாதியில் பாகிஸ்தானின் ஆலம்கிர் காஜி ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் 58 வது நிமிடத்தில் இந்தியாவின் பிரிசன் பெர்னாண்டஸ் முழங்கால் மீது மோதிய பாகிஸ்தானின் ஜுனைடுக்கு ‘ரெட் கார்டு’ வழங்கப்பட்டு, உடனடியாக வெளியேற்றப்பட்டார். இதனால் பாகிஸ்தான் அணி 10 வீரர்களுடன் விளையாடியது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, லுங்டிம் அனுப்பிய பந்தை மேக்கார்டன் நிக்சன் தட்டிக்கொடுக்க, சுஹைல் பட் அதனை கோலாக மாற்ற ஆட்டம் 1-1 என்ற சமநிலையை எட்டியது.
ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய அப்துல் ரபீஹ் அடித்த கார்னர் பந்தை சந்தீப் மண்டி தலையால் முட்டி கோல் அடிக்க இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், 2021, 2023, 2026 என தொடர்ந்து 3வது முறையாக SAFF சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இந்திய கால்பந்து அணி வரலாறு படைத்துள்ளது. மேலும், இது இந்திய வெல்லும் 10 வது SAFF சாம்பியன்ஷிப் பட்டம் ஆகும்.