வரலாறு படைத்த விராட் கோஹ்லியின் படை! லண்டன் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.. வெற்றி தருணத்தின் வீடியோ காட்சி
லண்டனில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டி சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளுக்குமிடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 12ம் திகதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 129 ரன்களும், ரோகித் சர்மா 83 ரன்களும், கோலி 42 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும், ரிஷப் பந்த் 37 ரன்கள் எடுத்தனர்.
Every single one of us wanted this win, you could see it, you could feel it and watching it play out was incredible. pic.twitter.com/cJJ6PpcHm5
— Rohit Sharma (@ImRo45) August 16, 2021
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியும் இந்திய பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நெருங்கி வந்து அவுட் ஆனார்.
இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 381 ரன்களை திரட்டியது. சிறிய முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. டெயில் எண்டர்களான முகமது ஷமி அரைசதமும், பும்ரா 34 ரன்களும் எடுத்து திரும்பிப் பார்க்க வைத்தனர். இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய்தார் கேப்டன் கோஹ்லி.
இதன் மூலம் 272 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து 2வது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் கைவசம் 60 ஓவர்கள் இருந்தன.
Ishant Sharma departs for 16 ☝️
— ICC (@ICC) August 16, 2021
Ollie Robinson traps him in front of the stumps. #WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/3H3qdqP2zA
இந்த நேரத்தில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பர்ன்ஸை டக் அவுட் ஆக்கி ஜச்பிரித் பும்ராவும், இரண்டாவது ஓவரில் டாம் சிப்லேயை டக் அவுட் ஆக்கி முகமது ஷமியும் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து அணியால் இறுதி வரை மீள முடியவில்லை. டோ ரூட்டை 33 ரன்களில் காலி செய்தார் பும்ரா. அதே போல பிற்பகுதி பேட்ஸ்மேன்கள் 4 பேரை வரிசையாக காலி செய்தார் முகமது சிராஜ்.
What a game of cricket ?
— Virat Kohli (@imVkohli) August 16, 2021
Everyone stepping up, love the commitment and attitude. Way to go boys ?? ? pic.twitter.com/hSgmxkLiiP
இதன் மூலம் இங்கிலாந்து அணியை வெறும் 120 ரன்களுக்கு சுருட்டி 151 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியை இந்திய அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இதன்மூலம் 1986, 2014-ம் ஆண்டுக்கு பிறகு புகழ்பெற்ற இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் இந்தியாவிற்கு ஒரு வரலாற்று டெஸ்ட் வெற்றி கிடைத்திருக்கிறது. லாட்ஸ் வெற்றியின் மூலம் கபில்தேவ், டோனி வரிசையில் கோஹ்லியும் புதிய வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The Winning Moment
— Pranjal (@pranjal__one8) August 16, 2021
What a Moment for India and the Celebrations ?
Hook Itt ??????#IndvsEng pic.twitter.com/Vc0ATnemPy