தெற்காசிய கால்பந்து போட்டியில் அபார வெற்றியை பெற்றது இந்தியா!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று தெற்காசிய கால்பந்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த போட்டியில் இந்தியா உட்பட 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த 8 அணிகளும் இரண்டாக பிரிக்கப்பட்டது.
அதாவது அணி A இல் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் B அணியில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகள் இருந்தது.
இந்தியாவின் வெற்றி
நேற்று இரவு 7 மணியளவில் ஆரம்பிக்கபட்ட போட்டியில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதின.
இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 10வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து அசத்தினார்.
IND vs PAK sees RED in the first half ?
— FanCode (@FanCode) June 21, 2023
India vs Pakistan is never fully complete without the fireworks and heated emotions ?#INDvPAKonFanCode #SAFFChampionship2023 pic.twitter.com/xJLZTmcrp5
மீண்டும் 6 வது நிமிடம் மற்றும் 74வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுனில் சேத்ரி கோல் அடித்தார்.
தொடர்ந்து 81 வது நிமிடத்தில் இந்திய அணியின் உதாண்டா சிங் கோல் அடித்தார்.
இறுதியில், ஆட்ட நேர முடிவில் 4-0 என்கிற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றியை பெற்றது.
ரெட் கார்ட்
போட்டியின் இடையில் இகோர் ஸ்டிமாக்-கிற்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. முறையற்ற ஒரு தீர்வை வழங்கியதால் அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.
இக்பாலின் கையிலிருந்து பந்தை தட்டிச் செல்ல முயன்றார். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் எதிர்ப்பை நடுவருக்குத் தெரிவித்துள்ளனனர்.
இதன் காரணமாகவே அவருக்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.