2,62,144இல் ஒரு முறை - நாணய சுழற்சியில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி
நாணய சுழற்சியில் எந்த அணியும் செய்யாத மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
Aus vs Ind
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று ODI தொடரை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் உள்ளது.

இன்று சிட்னியில் நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டம் தேர்வு செய்து, 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 236 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் தோற்றதன் மூலம், இந்திய அணி தொடர்ச்சியாக 18 போட்டிகளில் நாணய சுழற்சியில் தோற்றுள்ளது.
2,62,144 இல் ஒரு பங்கு
இதன் நிகழ்தகவு 2,62,144-ல் ஒரு பங்கு ஆகும். 2,62,144 முறையில் ஒரு முறை மட்டுமே இப்படி 18 முறை தொடர்ச்சியாக தோல்வி அடைய முடியும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில், நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா நாணய சுழற்சியில் தோற்றார்.

ரோஹித் சர்மா 12 போட்டிகளிலும், அதன் பின்னர் அணித்தலைவராக வந்த கே.எல்.ராகுல் 3 போட்டிகளிலும், சுப்மன் கில் 3 போட்டிகளிலும் நாணய சுழற்சியில் தோற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் நாணய சுழற்சியில் தோற்ற அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 11 போட்டிகளில் நாணய சுழற்சியில் தோற்று, நெதர்லாந்து 2வது இடத்தில் உள்ளது.

இதே போல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும், உலகக்கோப்பையில் தொடர்ந்து 6 போட்டிகளில் நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |