13 வயதில் ரூ.100 கோடி நிறுவனம்: இளம் வயதில் சாதித்த அந்த சிறுவன் யார்? சொத்து மதிப்பு
இந்தியாவின் இளம் வயது தொழிலதிபர் என்ற பெருமையை 13 வயதில் சொந்தமாக்கியவர் திலக் மேத்தா, இவர் கடந்து வந்த வெற்றிப் பாதை குறித்து பார்ப்போம் .
திலக் மேத்தா (Tilak Mehta)
திலக் மேத்தா இந்தியாவின் இளம் வயது தொழிலதிபர் மற்றும் மிகவும் வெற்றிகரமான தொழிலதிபர், இவர் தனது 13 வயதில் சொந்தமான நிறுவனம் ஒன்றை தொடங்கி இந்திய மக்களை ஆச்சரியத்திற்குள் மூழ்கடித்தார்.
பார்சல் உணவுகளை டெலிவரி செய்யும் மும்பையின் பிரபலமான டப்பாவாலா(Dabbawalas) நிறுவனத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட திலக் மேத்தா, உள்ளூர்களில் ஒரே நாளில் டெலிவரி செய்யக் கூடிய “Paper n Parcels” என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.
மாமா வீட்டில் நடந்த திருப்பம்
திலக் மேத்தா தன்னுடைய 13வது வயதில் தன்னுடைய மாமா வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது, தன்னுடைய புத்தகங்களை அங்கேயே மறந்து வைத்து விட்டு வந்துள்ளார். இதையடுத்து புத்தகங்களை டெலிவரி செய்யக் கூடிய டெலிவரி ஏஜென்சிகளை திலக் மேத்தா தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது புத்தகங்களை டெலிவரி செய்வதற்கு கூடுதல் நாட்கள் எடுக்கும் என்றும், ஒரே நாளில் டெலிவரி செய்ய வேண்டும் என்றால் கூடுதல் செலவு ஆகும் என்றும் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது தான் 13 வயதான திலக் மேத்தாவுக்கு “Paper n Parcels” நிறுவனத்தின் ஐடியா கிடைத்துள்ளது.
டப்பாவாலா உடன் கைகோர்த்த திலக் மேத்தா
“Paper n Parcels” நிறுவனத்திற்கான ஐடியா திலக் மேத்தாவுக்கு கிடைத்து இருந்தாலும், அதற்கான செலவையும் திலக் வர்மா யோசித்தார்.
இதையடுத்து தான், மும்பையின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு பார்சல் உணவுகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்யும் பிரபலமான டப்பாவாலா நிறுவனத்தின் வழிமுறைகளை பின்பற்ற தொடங்கினார்.
ஆரம்ப காலத்தில் இந்த தொழில் யோசனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக தந்தை வழங்கிய நிதியுடன் சேர்த்து, திலக் மேத்தா டப்பாவாலாக்களுடன் கைகோர்த்து குறைந்த செலவில் பார்சல்களை அனுப்பும் சேவையை செய்தார்.
ஆன்லைன் டெலிவரி
இறுதியில் 2018ம் ஆண்டு இணையதளம் ஒன்றை உருவாக்கி டெலிவரி தொடர்பான ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸை திலக் மேத்தா நிர்வகித்தார்.
ரூ.100 கோடி நிறுவனம்
தன்னுடைய விடாமுயற்சி மற்றும் சிறப்பான சிந்தனையால் “Paper n Parcels” டெலிவரி நிறுவனத்தின் மதிப்பு ரூ.100 கோடியை எட்டியது.
அத்துடன் பல இந்தியர்களுக்கு திலக் மேத்தாவின் “Paper n Parcels” நிறுவனத்தால் வேலைவாய்ப்பும் கிடைத்தது.
திலக் மேத்தா சொத்து மதிப்பு
திலக் மேத்தாவின் கடந்த 2021ம் ஆண்டில் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.65 கோடியாகும்.
வெளியான தகவல்களின் அடிப்படையில், திலக் மேத்தாவின் மாத வருமானம் ரூ.2 கோடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
tilak mehta success story, tilak mehta net worth,