நண்பர்கள் இருவர் உருவாக்கிய நிறுவனம்... அவர்களின் சொத்து மதிப்பு இன்று தலா ரூ 8600 கோடி
Razorpay என்ற நிறுவனத்தை இணைந்து நிறுவிய ஷஷாங்க் குமார் மற்றும் ஹர்ஷில் மாத்தூர் ஆகிய இருவரும் 2025 ஆம் ஆண்டின் இந்தியாவின் இளம் வயது பெரும் கோடீஸ்வரர்கள் என தெரிவாகியுள்ளனர்.
ஐஐடி ரூர்க்கியில் சந்தித்து
34 வயதேயான இருவரின் சொத்து மதிப்பும் தலா ரூ 8,643 கோடி என்றே தெரிய வந்துள்ளது. ஆனால் இதே சொத்து மதிப்புடன் சீனாவின் இளம் வயது பெரும் கோடீஸ்வரராக 29 வயது Wang Zelong தெரிவாகியுள்ளார்.
ஐஐடி ரூர்க்கியில் கல்வி பயிலும் போதே குமார் மற்றும் மாத்தூர் முதல் முறையாக சந்தித்துள்ளனர். 2014ல் இருவரும் இணைந்து Razorpay என்ற நிறுவனத்தை பெங்களூருவில் நிறுவியுள்ளனர்.
தங்கள் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக குமார் பணியாற்றியுள்ளார். மாத்தூர் ஸ்க்லம்பெர்கரில் வயர்லைன் களப் பொறியாளராக பணியாற்றியுள்ளார்.
இந்தியாவில் இணையமூடாக பணம் செலுத்துதலின் மோசமான நிலையை உணர்ந்த பிறகே Razorpay நிறுவனத்தை நிறுவியதாக மாத்தூர் குறிப்பிட்டுள்ளார். Razorpay நிறுவனமானது வேகமாக வளர்ச்சி கண்டது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில், அதன் Series-F நிதி திரட்டும் சுற்றில் 375 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை திரட்டியது. இதனால் Razorpay நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7.5 பில்லியன் டொலராக உயர்ந்தது.
கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை
Razorpay நிறுவனத்தின் முதன்மையான முதலீட்டாளர்களாக GIC, Sequoia, Ribbit Capital, Tiger Global, Matrix Partners India, மற்றும் Y Combinator ஆகியோர் உள்ளனர்.
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில், கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்சி காரணமாக எண்ணிக்கை 249 ஆக உயர்ந்தது.
இருப்பினும், சந்தையில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் காரணமாக 2023 இல் இது 187 ஆகக் குறைந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டில், பில்லியனர்கள் எண்ணிக்கை 271 ஐ எட்டியது, 2025 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை மேலும் 284 ஆக அதிகரித்தது.
மட்டுமின்றி, இந்தியாவின் 62 சதவீத கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளனர், இது நேர்மறையான பொருளாதார போக்குகளை எடுத்துக்காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |