சர்வதேச மாணவர்களுக்காக 2 சிறப்பு வகை விசாக்களை அறிமுகப்படுத்திய இந்தியா
இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்காக 2 சிறப்பு வகை விசாக்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
2 சிறப்பு வகை விசா
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை கருத்தில் கொண்டு சர்வதேச மாணவர்களுக்காக இரண்டு சிறப்பு வகை விசாக்களை இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்காக 'இ-ஸ்டூடண்ட்' (e-student visa), 'இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்' (e-student-x visa) என்ற 2 சிறப்பு பிரிவு விசாக்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், 'ஸ்டடி இன் இந்தியா' (Study in India) என்ற இணையதளத்தையும் தொடங்கி உள்ளது. விசாவை பெறுவதற்கு அனைத்து விண்ணப்பதாரர்களும் 'Study in India' (SII) என்ற போர்ட்டலைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் முதலில் இணையதளம் மூலமாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்கான சேர்க்க கடிதம் கிடைத்த பின்னர் தான் விசா பெறுவதற்கு இணையதளத்தில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதில், தகுதியான மாணவர்களுக்கு e-student visa வழங்கப்படும். அவர்களை சார்ந்தவர்களுக்கு 'e-student-x visa' அளிக்கப்படும்.
மாணவர்களின் படிப்பின் கால அளவை பொறுத்து 5 ஆண்டுகள் வரை விசா வழங்கப்படும். இதனை நீட்டித்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |