ஸ்மார்ட்போன்களில் Pre-installed செயலிகளையும் நீக்கலாம்: புதிய விதிமுறைகளை வகுக்கும் அரசு
செல்போன்களில் Pre-installed செயலிகளை நீக்கும் புதிய வசதி விரைவில் கட்டாயமாக்கப்படும் என தகவல் வெளியாகி வருகிறது.
அரசு திட்டம்
ஸ்மார்ட் போன்கள் ஆக்கிரமிப்புக்கு பிறகு தனியுரிமை என்பது முற்றிலும் கேள்வி குறியாகிவிட்டது, மேலும் தனிமனித விவரங்கள் சந்தையில் விற்பனை பொருளாக மாறிவிட்டது.
எனவே தகவல் கசிவு மற்றும் உளவு ஆகியவற்றில் இருந்து பயனர்களை பாதுகாப்பதற்காக மத்திய அரசு புதிய விதிமுறை கொள்கைகளை வகுத்து வருகிறது.
தகவல் கசிவு தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய அரசு செய்து வரும் நிலையில், அது தொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Pre-installed செயலி
அந்த தகவலின் அடிப்படையில், புதிய ஸ்மார்ட் போன்களில் வாங்கும் போதே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளை பயனர்கள் தேவை இல்லாவிட்டால் நீக்கி கொள்ளும் வசதி குறித்து அரசு புதிய விதிமுறைகளை வகுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் விரைவில் அரசு உத்தரவிடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.