ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து எதிர்த்து விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து-இந்திய அணிகளுக்கிடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 18-ஆம் திகதி இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது.
சமீபத்தில் இறுதிப்போட்டிக்கான 15 வீரர்கள் அடங்கிய அணியை நியூசிலாந்து அறிவித்தது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் நியூசிலாந்து எதிர்த்து விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விபரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, கில், புஜாரா, பந்த், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, சிராஜ், சஹா, உமேஷ் யாதவ், விஹாரி.
கில்-ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டகாரர்களாக களமிறங்குவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், 15 பேர் அடங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஷார்துல் தாக்கூர், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.