இந்தியன் 2 படத்தில் இந்த 5 மாற்றங்கள் செய்ய வேண்டும்: CBFC பரிந்துரை
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகவுள்ளது.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேலும், படத்தில் 5 இடங்களில் மாற்றங்கள் செய்யவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
CBFC பரிந்துரைக்கப்பட்ட 5 மாற்றங்கள்
1. புகைப்பிடித்தல் கேடு என்கிற வாசகம் படத்தில் நிறைய இடங்களில் வருமாறும், கருப்பு நிறத்தில் எழுத்துக்களின் அளவை பெரியதாக்கி வெள்ளை பேக்கிரவுண்டில் அந்த வார்தைகள் இடம்பெறும் வகையில் மாற்ற வேண்டும்.
2. படத்தின் குறிப்பிட்ட சில காட்சிகளில் வெளிப்படையாக தெரியும் உடல் பாகங்களை ப்லர் (Blur) செய்து காட்டவேண்டும்.
3. "Dirty Indian" போன்ற சில தகாத வார்தைகளை மாற்றவும், படத்தில் பயன்படுத்தப்பட்ட "லஞ்ச சந்தை" (Bribe Market) என்ற லேபிளை மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
4. குறைந்த ஆடைகள் கொண்ட அல்லது ஆடையில்லாது நடிகர்கள் வரும் காட்சிகளை மாற்றம் செய்ய வேண்டும்.
5. படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காப்பி ரைட் கண்டென்ட்டுகளுக்கு NOC சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |