ரூ 300 கோடி சம்பளம்... கூகுள் தேடு பொறியை அழித்தவர் என குற்றஞ்சாட்டப்படும் இந்தியர்: யார் இவர்?
2 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்ட கூகுள் நிறுவனம் உலகின் மிகவும் மதிப்புமிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும்.
அதன் மோசமான நிலையில்
கூகுள் நிறுவனம் பல்வேறு தொழில் முயற்சிகளை முன்னெடுத்து நடத்தி வந்தாலும், அதன் பிரபலமான தேடு பொறி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜேர்மன் கல்வியாளர்களின் ஆய்வின்படி, கூகுள் தேடு பொறி அதன் மோசமான நிலையில் இருந்து வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், தரமற்ற தரவுகளை அது பயனாளர்களுக்கு வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் இந்த நிலைக்கு காரணம் ஒரு IIT பட்டதாரியின் செயற்பாடு என்றும், அவரே கூகுள் தேடு பொறியை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வருகிறார் என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அந்த IIT பட்டதாரி வேறு யாருமல்ல, இந்தியரான Prabhakar Raghavan என்பவரே. தற்போது கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார் பிரபாகர் ராகவன்.
தரம் நாளுக்கு நாள்
மட்டுமின்றி கூகுள் தேடு பொறியின் மொத்த பொறுப்பும் இவருக்க்கு தான். 2022ல் மட்டும் பிரபாகர் ராகவன் கூகுள் நிறுவனத்தில் இருந்து சுமார் ரூ 300 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
விளம்பரங்களை பெருக்கும் நோக்கில் பிரபாகர் ராகவன் கூகுள் தேடு பொறியை கண்டுகொள்ளவில்லை என்றும், அதன் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் Edward Zitron என்பவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போபால் நகரில் பிறந்து வளர்ந்த ராகவன் Campion பாடசாலையில் தமது பள்ளிக்கல்வியை முடித்துள்ளார். மட்ராஸ் IIT பட்டதாரியான ராகவன், அதன் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் இணையும் முன்னர் ராகவன் Yahoo! நிறுவனத்தை வழிநடத்தி வந்துள்ளார். Yahoo! நிறுவனத்திலும் தேடு பொறி தொழில்நுட்பத்தை தமது பொறுப்பில் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |