21 வயதில் மாதம் 5 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் நடிகை! அவரது சொத்து மதிப்பு
கொரியன் படங்களில் நடித்து மாதந்தோறும் 5 லட்ச ரூபாயை சம்பாதித்து வருகிறார் 21 வயதேயான நடிகை அனுஷ்கா சென்.
பாலிவுட்டில் இளம் நடிகர்- நடிகைகளை தொடர்ந்து மிக சிறிய வயதில் கொரியன் படங்களின் மூலம் சாதித்து வருகிறார் அனுஷ்கா சென்.
7 வயதில் 2009ம் ஆண்டு திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். அடுத்ததாக 2012ம் ஆண்டு Baal Veer தொடரில் நடித்ததன் மூலம் பிரபல்யமானார்.
தொடர்ந்து 2015ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான அனுஷ்கா சென்னின் முதல் படமே சூப்பர் ஹிட்டானது.
அடுத்தடுத்து தொடர்களில் நடித்து வந்த அனுஷ்கா சென், நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இதன்மூலம் கொரியன் படமான Asia நடிக்கும் வாய்ப்பு வந்தது, முதல் இந்திய நடிகையாக கொரியன் படத்தில் அறிமுகமானார்.
அப்போது பேசுகையில், Asia நாடுகளில் இருக்கும் பிரபலங்களை ஒன்றிணைத்து உருவாகும் படம் இதுவாகும், இந்தியாவிலிருந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன், சிறப்பாக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இதுவரையிலும் தான் நடிக்காத கதாபாத்திரம் என்றும், இந்த வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
கடின உழைப்பால் 21 வயதிலேயே ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அனுஷ்கா சென்னின் மாத வருமானம் மட்டும் 5 லட்ச ரூபாயாகும்.
இவரது சொத்துமதிப்பு 15 கோடி ரூபாய் என்றும் விலை மதிப்புமிக்க கார்களை சொந்தமாக வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.