மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவில் இந்திய நடிகையின் உரை: இணையத்தில் வைரலான வீடியோ...
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்பட்ட ஒரே இந்திய நடிகை, சோனம் கபூர் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். சோனம் பிரபல நடிகர் அனில் கபூரின் மகளாவார்.
இந்நிலையில், முடிசூட்டுவிழாவின்போது சோனம் ஆற்றிய சிற்றுரை இணையத்தில் வைரலாகியுள்ளது.
தாய்மொழியில் வணக்கம் கூறிய சோனம்
முடிசூட்டுவிழாவின்போது, காமன்வெல்த் இசைக்குழுவினரை அறிமுகப்படுத்தும் பொறுப்பு சோனம் கபூருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
sonam kapoor's spoken word coronation performance is exactly what we hoped it to be, and whyyy is she talking like that as if its a 5th grade elocution contest ?? pic.twitter.com/MICGzB2GzW
— tara (@saurnaurr) May 8, 2023
தனது சிற்றுரையை ‘நமஸ்தே’ என தனது தாய்மொழியில் துவங்கிய சோனம், காமன்வெல்த் குறித்து ஒரு அறிமுக உரை ஆற்றிவிட்டு, காமன்வெல்த் இசைக்குழுவினரை அறிமுகப்படுத்தினார்.
அவர் உரையாற்றும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.