இஸ்ரேல் அரசு நிறுவனத்துடன் ரூ 8,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்யும் இந்திய விமானப்படை
இஸ்ரேலிய அரசுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து ஆறு வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்குவதற்கான சுமார் ரூ.8,000 கோடி ஒப்பந்தத்தை இந்திய விமானப்படை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட
இஸ்ரேல் விமானத் தொழில் என அறியப்படும் IAI நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டால், ஆறு பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட போயிங் 767 வணிக விமானங்களை எரிபொருள் நிரப்பும் விமானங்களாக மாற்றியமைக்கப்படும்.

பின்னர் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும். இந்த ஒப்பந்தத்திற்கான ஏலத்தில் இஸ்ரேலின் IAI நிறுவனம் மட்டும் ஒற்றை விற்பனையாளராக உருவெடுத்துள்ளது, மேலும் 30 சதவீத பணிகள் இந்தியாவில் முன்னெடுக்கப்பட உள்ளது.
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களும் போட்டியில் கலந்துகொண்டுள்ளது. இறுதியில் இஸ்ரேலின் IAI நிறுவனம் வென்றுள்ளது. தற்போது இந்திய விமானப்படையிடம் ரஷ்ய தயாரிப்பான 6 எரிபொருள் நிரப்பும் Il-78 விமானங்கள் செயல்பாட்டில் உள்ளது.
படிப்படியாக வெளியேற்றும்
இந்த விமானங்கள் ஆக்ராவை தளமாகக் கொண்டு இந்திய விமானப்படை மற்றும் கடற்படையின் அனைத்து வகையான போர் விமானங்களுக்கும் உதவி வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் இந்திய விமானப்படை மேலும் ஆறு விமான எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்க பல முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் பல காரணங்களால் தாமதமேற்பட்டு வந்துள்ளது.

இந்திய விமானப்படை தனது பாரம்பரிய விமானங்களை படிப்படியாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது, மேலும் அதன் புதிய விமான வரிசைகள் நடுவானில் எரிபொருள் நிரப்புவதன் மூலம் நீண்ட நேரம் பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |