போர் என்றால் இழப்புகள் ஏற்படும்... இறுதியில் ஒப்புக்கொண்ட இந்திய விமானப்படை
விரிவான விவரங்கள் எதையும் வெளியிடாமல் போர் என்றால் இழப்புகள் ஏற்படும் என இந்திய விமானப்படை சூசகமாக தெரிவித்துள்ளது தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சீன தயாரிப்பு ஆயுதங்களால்
இந்திய விமானப்படைக்கு இழப்புகள் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அதிகாரிகள், பாகிஸ்தானுடன் நடந்த மோதலுக்குப் பிறகு அனைத்து விமானிகளும் தங்கள் முகாம்களுக்கு திரும்பியுள்ளதாக பதிலளித்துள்ளனர்.
ஆனால், பிரான்ஸ் தயாரிப்பான இந்தியாவின் ரஃபேல் விமானம் உட்பட ஐந்து விமானங்களை சீன தயாரிப்பு ஆயுதங்களால் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் புதன்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.
இந்தியா தரப்பில் இதுவரை இந்த விவகாரம் உறுதி செய்யப்படவில்லை. மட்டுமின்றி, ரஃபேல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியானத் தகவலை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்துள்ளதை நிபுணர்கள் சிலர் உறுதி செய்துள்ளனர்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி
மூன்று போர் விமானங்கள்
மட்டுமின்றி, ரஃபேல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதை பிரான்ஸ் உளவுத்துறை அதிகாரி ஒருவரும் ஒப்புக்கொண்டதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பதிவு செய்திருந்தது. அதே வேளை, அமெரிக்க நிபுணர் ஒருவரும் இந்த விவகாரத்தில் தமது கருத்தையும் பதிவு செய்திருந்தார்.
அத்துடன், புதன்கிழமை மூன்று போர் விமானங்கள் இந்தியப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக காஷ்மீரில் உள்ள நான்கு அரசாங்க வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளனர்.
மேலும், எல்லையைத் தாண்டி ஒன்பது பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதாக இந்தியா கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு மூன்று விமானங்கள் தொடர்பில் காஷ்மீர் அரசாங்க அதிகாரிகள் உறுதி செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |