உறவினரை ஏமாற்றி அமெரிக்காவுக்கு அழைத்துவந்த இந்திய வம்சாவளி தம்பதி: செய்த மோசமான செயல்...

United States of America India
By Balamanuvelan Jan 24, 2024 12:33 PM GMT
Report

தங்கள் உறவினர் ஒருவரை, அமெரிக்காவில் கல்வி கற்க வைப்பதாகக் கூறி ஏமாற்றி இந்தியாவிலிருந்து அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதியர் சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ளார்கள்.

உறவினரை ஏமாற்றி அமெரிக்காவுக்கு அழைத்துவந்த இந்திய வம்சாவளி தம்பதி

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வாழும் ஹர்மன்பிரீத் சிங் (Harmanpreet Singh, 30) குல்பீர் கௌர் (Kulbir Kaur, 43) தம்பதியர், தங்கள் உறவினரான இளைஞர் ஒருவரை (18 வயதுக்குக் குறைவானவர்), அமெரிக்காவில் கல்வி கற்க வைப்பதாகக் கூறி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்துவந்துள்ளனர்.

ஆனால், இந்தியா வந்ததும், அவரது பாஸ்போர்ட் விசா முதலான ஆவணங்களை வாங்கிவைத்துக்கொண்டு அவரை தங்கள் கடையிலும், பெட்ரோல் நிலையத்திலும் வேலை செய்ய வற்புறுத்தியுள்ளனர்.

உறவினரை ஏமாற்றி அமெரிக்காவுக்கு அழைத்துவந்த இந்திய வம்சாவளி தம்பதி: செய்த மோசமான செயல்... | Indian America Couple Convicted Forcing Cousin

அவருக்கு குறைவான சாப்பாடு, குறைவான ஊதியம் கொடுத்ததுடன், அவரை CCTV கமெரா மூலம் கண்காணித்துவந்துள்ள தம்பதியர், அவரை அலுவலகத்தின் பின்னாலுள்ள ஒரு அறையில் தங்கவைத்துள்ளார்கள்.

தனது புலம்பெயர்தல் ஆவணங்களை கொடுக்குமாறு அவர் கேட்டபோதும், இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோதும், அவரை முடியை பிடித்து இழுத்து, கன்னத்தில் அறைந்து, காலால் மிதித்திருக்கிறார்கள்.

ஒரு நாள் ஓய்வு தருமாறு கேட்டதற்கு, அவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும் இருக்கிறார்கள் அந்த தம்பதியர்.

தீர்ப்பு திகதி அறிவிப்பு

தம்பதியர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குற்றவாளிகள் என நீதிபதிகள் முடிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுடைய தண்டனைக்காலம் முடிந்த பிறகும், ஐந்து ஆண்டுகள் வரை அவர்கள் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பார்கள்.

அத்துடன், 250,000 டொலர்கள் வரை அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கில், மே மாதம் 8ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

உறவினரை ஏமாற்றி அமெரிக்காவுக்கு அழைத்துவந்த இந்திய வம்சாவளி தம்பதி: செய்த மோசமான செயல்... | Indian America Couple Convicted Forcing Cousin

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US