தேர்வு, நேர்காணல்களில் ஏமாற்றுவதற்கான AI கருவியை உருவாக்கியுள்ள இந்திய வம்சாவளி நபர்
AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வெகுவாக வளர்ந்து வருகிறது. மருத்துவத்துறை தொடங்கி நமது அன்றாட பணிகளில் கூட உதவும் வகையில் AI வளர்ந்துள்ளது.
அதே போல், தேர்வு, நேர்காணல்களில் கூட பிறருக்கு தெரியாமல், கேள்விகளுக்கு என்ன பதில்களை வழங்க வேண்டும் என உதவும் வகையில் AI வளர்ந்து விட்டது.
பல்கலைகழகத்திலிருந்து நீக்கம்
ராய் லீ மற்றும் நீல் சண்முகம் என்ற இரு மாணவர்கள் கொலம்பியா பல்கலைகழகத்தில் படிக்கும் போது, Interview Coder என்ற கருவியை கண்டறிந்தனர்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் நேர்காணலின் போது, நேர்காணல் செய்பவர் கண்டுபிடிக்காத வகையில், திரைக்கு பின்னால், கோடிங் சிக்கலை நிகழ்நேர உதவியை வழங்கியது.
இந்த கருவி பலரால் பாராட்டப்பட்டாலும், இந்த கருவியை கண்டுபிடித்ததற்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து அவர்கள் இருவரையும் நீக்கம் செய்ய வழிவகுத்தது.
அதை தொடர்ந்து, இருவரும் இணைந்து, இந்த கருவியை மேம்படுத்தி Cluely என்ற பெயரில் AI நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
ரூ. 44.3 கோடி நிதி
புதிய முயற்சியான க்ளூலிக்கு 5.3 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 44.3 கோடி) நிதியை, முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டியுள்ளனர்.
நேர்காணல்கள் மட்டுமில்லாது இணையம் மூலம் நடைபெறும் தேர்வுகள், விற்பனை அழைப்புகள் அன்றாட தொழில்முறை பணிகள் போன்ற பணிகளின் போதும், நிகழ்நேர உதவியை வழங்குவதாக சந்தைப்படுத்தப்படுகிறது.
$5 million to change the definition of the word "cheating"https://t.co/rJuDbS1eC5 https://t.co/BMbBnz1fTE
— Roy (@im_roy_lee) April 21, 2025
இந்த கருவியை அதை பயன்படுத்துபவர் தவிர வேறு எவரும் கண்டறிய முடியாது என வேலை நேர்காணலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ZOOM செயலியில் கூட, Screen sharing செய்யும் போதும், பிறர் அறியாத வகையில் இதனை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
இந்த கருவி பணியமர்த்தல் மற்றும் கல்வியில் க்ளூலி நம்பிக்கை மற்றும் நேர்மையை குறைப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், ஆண்டுக்கு 3 மில்லியன் டொலர் வருவாயை ஈட்டியதாக க்ளூலியின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இதனை பயன்படுத்தி அமேசான், மெட்டா, டிக்டோக் மற்றும் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பெற்றதாக லீ தெரிவித்துள்ளார்.
Cluely is out. cheat on everything. pic.twitter.com/EsRXQaCfUI
— Roy (@im_roy_lee) April 20, 2025
பெண் ஒருவருடன் இரவு உணவின் போது, இந்தக் கருவியைப் பயன்படுத்துவது போன்ற க்ளூலி வெளியீட்டு வீடியோ வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |