அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் இந்திய வம்சாவளியினர்: வெற்றியும் தோல்வியும்...
The 2026 US midterm elections are witnessing a growing presence of Indian American candidates in American politics, with several securing victories : 2026ஆம் ஆண்டுக்கான அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் இந்திய வம்சாவளியினர் பலர் போட்டியிட்டுள்ள நிலையில், அவர்களில் சிலர் கவனம் ஈர்க்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
உலக நாடுகள் பல உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க இடைக்காலத்தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன.
தேர்தல்களில் இந்திய வம்சாவளியினர் சிலரும் போட்டியிட்ட நிலையில், அவர்களில் வெற்றி பெற்றவர்கள் யார், வெற்றி பெறாதவர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்.
இந்திய வம்சாவளியினர், வெற்றியும் தோல்வியும்...
தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி அதிக இருக்கைகளைக் கைப்பற்றி ட்ரம்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், வெற்றி பெற்றவர்களில் இந்திய வம்சாவளியினர் சிலர் கவனம் ஈர்த்துவருகிறார்கள்.
அவர்களில் முக்கியமானவர், பியா தாண்டியா (39). பியா, இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்தவர் ஆவார்.

முதல் தலைமுறை இந்தோ அமெரிக்கரான பியா, ஒரு கல்வியாளராக வாழ்வைத் துவங்கி, கடும் போட்டி நிலவிய ஃப்ளோரிடாவின் 22ஆவது மாகாணத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி 51.9 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், மேரிலேண்ட் லெப்டினண்ட் கவர்னருமான, இந்திய வம்சாவளியினர் அருணா மில்லர் (61), தன் இருக்கையை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அருணா, இந்தியாவின் ஹைதராபாதில் பிறந்தவர், 7 வயதில் தன் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் அவர்.

வெற்றி பெற்றவர்களில் மற்றொருவர், இந்திய வம்சாவளியினரான சுஹாஸ் சுப்ரமணியம் (40).
ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட சுஹாஸ், விர்ஜினியாவின் 10ஆவது நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில், ஒஹையோவில், ட்ரம்ப் ஆதரவு பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளரான விவேக் ராமசாமி தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
விவேக், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான Dr ஏமி ஆக்டன் என்பவரிடம் தோல்வியடைந்துவிட்டார்.
