ஆண்டுக்கு 17,500 கோடி ஊதியம்! நாளொன்றுக்கு 48 கோடி: உலகிலேயே அதிக ஊதியம் பெறும் நபர்
உலகிலேயே அதிக ஊதியம் பெறும் ஊழியர் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
QuantumScape
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் நிறுவனம் QuantumScape. இது மின்சார கார்களுக்கான திட-நிலை ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் உலோக பேட்டரிகளை உருவாக்கும் நிறுவனமாகும்.
ஜக்தீப் சிங், டிம் ஹோல்ம், பிரிட்ஸ் பிரின்ஸ் ஆகிய மூவர் இதன் நிறுவனர்களாக உள்ளனர். இவர்களில் இந்தியரான ஜக்தீப் சிங் (Jagdeep Singh) தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார்.
இவரது வருமானம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவர் நாளொன்றுக்கு சராசரியாக 48 கோடி ரூபாய் பெறுவதாக தெரிய வந்துள்ளது.
உலகின் அதிக ஊதியம் பெறும் ஊழியர்
ஜக்தீப் சிங்கின் ஆண்டு வருமானம் ரூ.17,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உலகின் அதிக ஊதியம் பெறும் ஊழியராக இவர் உருவெடுத்தார்.
வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு சந்தையில் 'அதிக ஊதியம் பெறும் வேலை' என்பதன் வரையறை, பாரம்பரிய பெருநிறுவனங்களின் நிர்வாகத் துறையினருக்கு அப்பால் விரிவடைந்துள்ளதன் அடிப்படையில் ஜக்தீப் சிங் இந்த பெருமையை பெறுகிறார்.
ஜக்தீப் சிங் கடந்த ஆண்டு தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து கடந்த ஆண்டு தன்னை விடுவித்துக் கொண்டார். எனினும் தற்போது அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் தொடர்கிறார்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |