பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன்
பிரெஞ்சு நிறுவனமான Turgis Gaillard உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதை அடுத்து, இந்திய நிறுவனமான பாரத் ஃபோர்ஜ் பங்குகள் 2 சதவீதம் உயர்ந்தன.
போர்க்களத்திற்கு என
இரு நிறுவனங்களும் முன்னெடுத்துள்ள இந்த ஒப்பந்தமானது இந்திய ஆயுதப் படைகளுக்கு AAROK என்ற ஆபத்தான ட்ரோன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், போர்க்களத்திற்கு என வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட, வலுவான ட்ரோன்களை வழங்க இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளது.
Turgis Gaillard உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதை அடுத்து பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 61,886 கோடி என அதிகரித்துள்ளது. புதன்கிழமை மட்டும் பங்கு வர்த்தகத்தால் ரூ 4.86 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டில், பாரத் ஃபோர்ஜ் பங்குகள் 27.51 சதவீதம் சரிந்துள்ளன. இருப்பினும், இரண்டு வருட காலத்தில், அவை 55 சதவீதம் லாபத்தையும் ஈட்டியுள்ளது.
பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் புதிதாக உருவாக்கும் ட்ரோன்கள் MALE-class வகை என்றும் இது மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் குறைந்த பயன்பாட்டுச் செலவுகளையும் ஒருங்கிணைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான் அமைப்புகளை
இது நீண்ட நேரம் அதிக உயரத்தில் பறக்க முடியும் மற்றும் நீண்ட தூர கண்காணிப்புக்காக மின்காந்த உணரிகள் மற்றும் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் நிகழ்நேர போர்க்கள நுண்ணறிவை வழங்குகிறது.
AAROK ட்ரோன்களால் 1.5 டன்களுக்கும் அதிகமான ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும், அவற்றை பாதுகாப்பான தூரத்திலிருந்து தாக்கவும் முடியும். இந்த ட்ரோன் எதிரி பிரதேசத்திற்குள் உள்ள இலக்குகளைத் தாக்குவதிலும், பாதுகாப்புகளை சீர்குலைப்பதிலும், எதிரியின் தரையிலிருந்து வான் அமைப்புகளை முடக்குவதிலும் திறம்படச் செயல்படுகிறது என்று பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது.
துருக்கியின் ட்ரோன்களை நம்பியிருக்கும் பாகிஸ்தானிற்கும் மேம்பட்ட ட்ரோன்களை கைவசம் வைத்திருக்கும் சீனாவிற்கும் இது ஒரு கெட்ட செய்தியாக இருக்கும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |