தொடர் கனமழை.., 70 அடி நீள பாலத்தை 72 மணிநேரத்தில் கட்டி முடித்த இந்திய ராணுவத்தினர்
சிக்கிம் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தினர்
சிக்கிம் மாநிலத்தில் கடந்த 11 -ம் திகதி முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் வடக்கு சிக்கிமில் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், க்சு-சங்க்லாங்-டூங், மங்கன்-சங்க்லாங், சிங்தாம்-ரங்ராங் மற்றும் ரங்ராங்-தூங் போன்ற சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெள்ளத்தால் பாதித்து துண்டிக்கப்பட்ட போக்குவரத்தை விரைவாக சரிசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மழையால் துண்டிக்கப்பட்ட சிக்கிமின் காங்டாக்கின் டிக்சு-சங்க்லாங் சாலையில் 70 அடி பெய்லி பாலத்தை ராணுவத்தை கட்டியுள்ளனர்.
இந்த பாலத்தின் கட்டுமான பணியானது கடந்த ஜூன் 23 -ம் திகதி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு 72 மணிநேரத்தில் இந்திய ராணுவத்தினர் பாலத்தை கட்டி முடித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |