பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய இராணுவத் தளபதி
இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால் வரைபடத்தில் நீடிக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும் என, இராணுவத் தளபதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை
டெல்லியில் நடந்த கலந்துரையாடல் அமர்வில் ஆபரேஷன் சிந்தூரை குறிப்பிட்டு, இந்திய இராணுவ தளபதி உபேந்திர திவேதியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். "நான் முன்பு கூறியதை நீங்கள் கேட்டிருந்தால் பாகிஸ்தான், தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் புவியியலின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்களா அல்லது வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்களா என்பதை முடிவு செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
இராணுவத் தளபதியின் இந்த கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு ஒரு நேரடியான செய்தியைக் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |