ஆபரேஷன் சிந்தூரில் 5 வீரர்கள் வீரமரணம் - அஞ்சலி செலுத்திய இந்திய ராணுவம்
ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த 5 வீரர்களுக்கு இந்திய ராணுவம் அஞ்சலி செலுத்தியுள்ளது.
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய ராணுவம் மே 7-ஆம் திகதி 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற போர்வீர நடவடிக்கையை ஆரம்பித்தது.
இதில் 5 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். “இவர்கள் தியாகத்தை நாடு என்றும் மறக்காது,” என ராணுவம் மரியாதை செலுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்தியா இந்த செயல்பாட்டை தொடர்ந்தது.
மே 7 முதல் மே 10 வரையிலான காலப்பகுதியில், லைன் ஆஃப் கண்ட்ரோலில் (LoC) கடுமையான தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு 35–40 பேர் வரை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், இந்தியாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்த சில மணி நேரங்களில்வே விரோதமாக தாக்குதல் நடத்தியது. இதற்காக இந்தியா கடுமையான பதிலை அளிக்கும் என எச்சரித்துள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கை பாகிஸ்தான் ராணுவத்துடன் ஹாட்லைன் வாயிலாக பேசினார்.
பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதலை இந்திய வீரர்கள் முற்றிலும் தடுத்து, தாக்குதல் முயற்சிகளை நுட்பமாக நசுக்கியுள்ளனர் என இந்தியா கூறியுள்ளது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Operation Sindoor Indian Army, Pahalgam terror attack India, 5 Indian soldiers killed, India Pakistan LOC clash, Indian Army tribute soldiers, Jammu Kashmir army operation, India Pakistan ceasefire violation, Rajiv Ghai army briefing