மனைவியை ICE அதிகாரிகள் கைது செய்ததாக சாதித்த நபர்: கொலை வழக்கில் கைது
Man who claimed ICE agents took his wife is arrested: ICE முகவர்கள் தனது மனைவியை கைது செய்ததாகக் கூறிய நபர் கைது செய்யப்பட்டார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்தவர், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகமை (ICE) அதிகாரிகள் தனது மனைவியை கைது செய்ததாகக் கூறியிருந்த நிலையில், அவரது மனைவியின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
ICE முகவர்கள்
30 வயதான ஜாஸ்மின் கில், செப்டம்பர் 30 அன்று சாக்ரமெண்டோவில் உள்ள தனது வீட்டில் கடைசியாகக் காணப்பட்டார்; அக்டோபர் 4 அன்று அவரது உறவினர் அவர் காணாமல் போனதாகப் புகார் அளித்தார்.

இந்த நிலையில், சாக்ரமெண்டோ மாவட்ட ஷெரிப் அலுவலகத்தின் தகவல்படி, ICE முகவர்கள் தனது மனைவியைக் கைது செய்துள்ளதாக ஜாஸ்மினின் கணவரான 28 வயது குரிந்தர் சிங் கில் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் விசாரணை அதிகாரிகள் ICE முகமையைத் தொடர்புகொண்டபோது, கில்லின் வீட்டில் எந்தவொரு அமலாக்க நடவடிக்கையும் உண்மையில் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
விசாரணை தொடர்ந்த நிலையில், கில் தம்பதியினர் விவாகரத்து பெற்று வருவதையும், குழந்தையை வளர்க்கும் உரிமை தொடர்பான தகராறில் ஈடுபட்டுள்ளதையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
தனது மனைவி காணாமல் போனது குறித்து குரிந்தர் அளித்த வாக்குமூலங்களிலும் பல முரண்பாடுகள் இருந்ததாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 1 அன்று எல் டொராடோ மாவட்டத்தில் எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், அது ஜாஸ்மினுடையவை என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சாக்ரமெண்டோ மாவட்ட ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குரிந்தர் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் சாக்ரமெண்டோ மாவட்ட முதன்மைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
செவிலியர்
சாக்ரமெண்டோ மாவட்ட ஷெரிப் அலுவலகப் பதிவுகளின்படி, அவருக்கு தற்போது பிணை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது.
முன்னதாக, ஜாக்ஸ்மின் குறித்த காணாமல் போனவர் சுவரொட்டியில், அவர் கடைசியாக சாக்ரமெண்டோ மாவட்டத்தில் உள்ள ஹெட்ஸ்டாக் தெரு மற்றும் அலெக்ரெட்டோ வே ஆகிய இடங்களுக்கு அருகில் நடந்து சென்றதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜாஸ்மின் எட்டு மாத ஆண் பிள்ளை ஒருவருக்கு தாய் எனவும், அவர் பதிவு செய்யப்பட்ட செவிலியர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜாஸ்மினின் தாயாரும் இந்தியாவில் செவிலியராகப் பணி செய்தவர் என்றே கூறப்படுகிறது.