டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு
டெக்சாஸில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பத்தினர் தங்களது உடல்நலம் மற்றும் மனநலத்தை படிப்படியாக இழந்து வருகின்றனர்.
சிதைந்து வரும் இந்திய குடும்பம்
அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கமான அதிகாரிகள் சந்திப்பிற்காக சென்ற தந்தை ஜெகதீஷ், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அதிகாரிகள் அங்கே தடுத்து டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள Dilley தடுப்புக்காவல் மையத்தில் அடைத்தனர்.
தற்போது கிட்டத்தட்ட 90 நாட்கள் Dilley தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்கள், போதிய மருத்துவ வசதி இன்றி உடல் நலத்திலும், மனநலத்திலும் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பம்
சமூக ஆர்வலர் ரேச்சல் சமீபத்தில் Dilley தடுப்புக்காவல் மையத்திற்கு சென்று ஜெகதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த நிலையில், ஜெகதீஷின் குழந்தைகளான 12 வயது சிறுவன் குரிக்கு மலக்குடலில் ரத்த கசிவு ஏற்பட்டு இருப்பதாகவும், 11 வயது சிறுமி மன்பிரீத்-க்கு மோசமான குடிநீர் காரணமாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெகதீஷின் மனைவிக்கு நீரிழிவு மற்றும் மூட்டுவலி பாதிப்புகளால் அவதியடைந்து வருவதாகவும் அவருக்கு போதிய மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தந்தை ஜெகதீஷ் உருக்கம்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ், மத மாற்றத்தால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக 2022ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த இவர், உபெர் ஓட்டுநராகவும், கடைகளில் வேலை பார்த்தும் தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக இங்கு வந்தேன், ஆனால் தற்போது என்னுடைய குடும்பத்தின் உயிர்களை நானே அழித்துவிட்டேனோ என்ற பயம் எனக்கு ஏற்பட்டுவிட்டதாக ஜெகதீஷ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |