சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்!
சுவிட்சர்லாந்தில் பயணம் மேற்கொண்ட இந்திய பைக்கர் ஒருவரை சக நாட்டவர் ஒருவர் சந்தித்து பூரிப்பு அடைந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு
இந்தியாவை சேர்ந்த பிரதீக் சதுர்வேதி என்ற ஐ.டி துறை ஊழியர் தனது வாழ்நாள் கனவை நிறைவேற்ற 5 மாதம் சிறப்பு விடுப்பு எடுத்து 24 நாடுகளுக்கு பயணம் செய்யும் திட்டத்தை செய்து வருகிறார்.
இதன் ஒருப்பகுதியாக அவர் சுவிட்சர்லாந்து வந்தடைந்த போது தனது சொந்த சக நாட்டவர் ஒருவரை பிரதீக் சதுர்வேதி சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பூரிப்பு மற்றும் ஆனந்தத்தை விளக்கும் வீடியோ பதிவு ஒன்றை பிரதீக் சதுர்வேதி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்திய தேசிய கொடியால் ஏற்பட்ட பூரிப்பு
அந்த வீடியோவில், பிரதீக் சதுர்வேதியின் அருகில் வந்து பேசிய அந்த மற்றொரு இந்தியர், “ உலக சுற்றுப்பயணம் செய்கிறீர்களா? என கேட்பதும், அவருடைய பைக்கை குறிப்பிட்டு நீங்கள் சிறப்பாக தயாராகி உள்ளீர்கள் என்று தெரிவிக்கிறார்.
இதற்கு பதிலளித்த சதுர்வேதி, சுவிட்சர்லாந்து தன்னுடைய பயணத்தில் 16வது நாடு என்றும் கூறுகிறார்.
மேலும் அந்த இந்தியர் நீங்கள் பயணங்களின் போது எங்கு தங்குகிறீர்கள் என கேட்கவே, அதற்கு Airbnb-களில் தங்குகிறேன் என பதிலளிக்கிறார்.
வீடியோவில் குறிப்பாக, சதுர்வேதியின் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த இந்திய தேசிய கொடியை பார்த்து மற்றொரு இந்தியர் ஆனந்தமடையும் அழகான காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இறுதியில், இந்திய தேசிய கொடியை பார்த்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், எங்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்கு எப்போது உண்டு என்று தெரிவித்து விட்டு, சதுர்வேதியுடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொள்கிறார்.
இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ
இந்திய தேசிய கொடியை பார்த்த போது அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் விலைமதிப்பற்றது, அவரது அன்பும், ஆதரவும் என்னுடைய நாளை முழுமையடைய செய்துள்ளது. என தலைப்பிட்டு சதுர்வேதி பகிர்ந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ தற்போது 14 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. பலர் இந்தியரின் ஆனந்தத்தையும், ஆதரவையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |