லண்டனின் பிரம்மாண்ட OWO கட்டிடம்: பளபளக்கும் ஹோட்டலாக மாற்றிய இந்திய குடும்பம்: மிரளவைக்கும் சொத்து மதிப்பு
பிரித்தானியாவில் பழைய போர் அலுவலக கட்டிடத்தை விலைக்கு வாங்கி புது பொலிவுடன் கூடிய வீடு மற்றும் ஹோட்டலாக இந்திய வம்சாவளி குடும்பத்தினர் மாற்றியுள்ளனர்.
பிரிட்டன் பழைய போர் அலுவலகம்
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் பாரம்பரியமான OWO என அழைக்கப்படும் Old War Office வளாகத்தை இந்திய வம்சாவளியினரான ஹிந்துஜா குடும்பம் 2015ம் ஆண்டு வாங்கியுள்ளது.
இதன் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 13,000 கோடி ரூபாயாகும், இதில் மொத்தம் 85 வீடுகள் உள்ளன, அத்துடன் 120 அறைகள், 9 ரெஸ்டாரன்ட்கள் மற்றும் 3 மதுக்கடைகளை உள்ளடக்கிய ஹோட்டல்கள் ஆகியவை உள்ளன.
சுமார் 1 லட்சத்து 88 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட Old War Office திட்டமானது பிரித்தானியாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஆடம்பரமான ரியல் எஸ்டேட் திட்டமாக விளங்குகிறது.
இதில் உள்ள ஒரு குடியிருப்பின் விலை பரப்பளவை பொருத்து கிட்டத்தட்ட 4 முதல் 50 மில்லியன் பவுண்டுகளாகும்.
இதனை இந்திய வம்சாவளி குடும்பத்தினரான ஹிந்துஜா குடும்பம் பெரும் தொகைக்கு வாங்கி புதிய பொலிவுடன் கூடிய வீடு மற்றும் ஹோட்டல்களை கொண்ட வணிக திட்டமாக மாற்றியுள்ளது.
சஞ்சய் ஹிந்துஜா
இந்த திட்டம் தொடர்பாக ஹிந்துஜா குடும்பத்தின் 3ம் தலைமுறை உறுப்பினரான சஞ்சய் ஹிந்துஜா தெரிவித்த தகவலில், இந்த விற்பனை ஒப்பந்தமானது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரக நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்களை கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
ஹிந்துஜா குடும்பத்தினரின் 2023ம் ஆண்டுக்கான நிகர சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டொலராகும். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 16,66,24,70,000 கோடியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indian Origin Businessman, Luxury Hotel, Old War Office, UK’s Iconic Old War Office, Hinduja family, big businesses, super luxury project, Sanjay Hinduja, London’s famous heritage property Old War Office (OWO), British government, Money, Google, Google business, Google News