ஒரே நாளில் ரூ.33,900 கோடி அதிகரித்த சொத்து: அந்த அதிர்ஷ்டசாலி இந்திய தொழிலதிபர் யார் தெரியுமா?
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ. 33,900 கோடி அதிகரித்துள்ளது.
கவுதம் அதானி
இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் மற்றும் அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு திங்கட்கிழமையில் மட்டும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு(Bloomberg Billionaires Index) வழங்கிய தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமையில் மட்டும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 4.08 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளது.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஒரே நாளில் சுமார் ரூ. 33,900 கோடி அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை உலக செல்வந்தர்களின் வரிசையில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு என்பது மிகப்பெரிய உயர்வு ஆகும்.
கவுதம் அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 94.2 பில்லியன் அமெரிக்க டொலராகும், இதன் மூலம் உலகின் 13வது கோடீஸ்வரர் என்ற இடத்தை கவுதம் அதானி தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
FT
2024ம் ஆண்டில் கவுதம் அதானியின் நிகர மதிப்பு கணிசமான உயர்வை கண்டுள்ளது, 2024 மட்டும் இதுவரை 9.90 பில்லியன் அமெரிக்க டொலர்கள், அதாவது ரூ.822.59 பில்லியன் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Gautam Adani, Adani Groups, Businessman, money, Bloomberg Billionaires Index, US dollars, Indian Rupees, richest person in India, richest person in World, world’s billionaires.