கேரள பெண்ணின் வீட்டுக் கடனை அடைத்த பிரபல கோடீஸ்வரர்.., அவர் யார் தெரியுமா?
கேரளாவில் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண்ணுக்கு கோடீஸ்வரர் ஒருவர் உதவியுள்ளார்.
கோடீஸ்வரர் உதவி
மலையாள ஊடகங்களின் படி சந்தியா என்ற பெண்ணும் அவரது கணவரும் இணைந்து 2019 -ம் ஆண்டில் வீட்டை கட்டுவதற்காக தனியார் நிறுவனத்தில் கடன் பெற்றனர்.
அவர்கள், கேரளாவைச் சேர்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்திடம் (NBFC) ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்.
இதையடுத்து, அவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில் அந்த கடனானது வட்டியுடன் சேர்த்து ரூ.8 லட்சமாக அதிகரித்துள்ளது.
பின்னர், கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை மணப்புரம் பைனான்ஸ் தொடங்கியுள்ளது.
இதனிடையே, 3 ஆண்டுகளுக்கு முன்பு கடனைத் திருப்பிச் செலுத்துவது நிறுத்தப்பட்டதால் சந்தியாவுக்கு 4 முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக NBFC தெரிவித்துள்ளது.
இதையடுத்து, NBFC நிறுவனத்தின் அதிகாரிகள் சந்தியாவின் வீட்டிற்கு சென்று அவரையும், அவரது குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினர். பின்னர், அவர்கள் சாலையில் பரிதவித்த காட்சி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவமானது வீடியோவாக பரவிய நிலையில், லூலு குழுமத்தின் தலைவரான யூசுப் அலியும் இதனை தெரிந்து கொண்டார். பின்னர், அவர் சந்தியா குடும்பத்திற்கு உதவி முன்வந்துள்ளார்.
இந்தக் கடனை திருப்பி செலுத்துமாறு யூசுப் அலி தனது குழுவினருக்கு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகியது. அதன்படி, சந்தியா வீட்டின் சாவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் நிரந்தர வைப்புத்தொகை தொடங்க ரூ.10 லட்சம் தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கு, சந்தியா அவருக்கு நன்றியை தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |