பிரித்தானியாவில் ரூ 2200 கோடி ஒப்பந்தங்களுடன் களமிறங்கிய இந்திய கோடீஸ்வரர்
இந்தியாவில் செயல்பட்டுவரும் நாராயண ஹ்ருதயாலயா நிறுவனமானது பிரித்தானியாவில் ரூ 2200 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
Practice Plus குழுமத்தின்
தொடர்புடைய நிறுவனம் பிரித்தானியாவை சேர்ந்த Practice Plus குழுமத்தின் மருத்துவமனைகளைக் கையகப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் Practice Plus குழுமத்தின் 100 சதவீத பங்குகளை வாங்குவதை உள்ளடக்கியது.

மருத்துவர் தேவி ஷெட்டி என்பவரால் நிறுவப்பட்ட நாராயணா ஹெல்த் நிறுவனம் தெரிவிக்கையில், இந்த ஒப்பந்தம் ஊடாக Practice Plus குழுமத்தின் ஏழு மருத்துவமனைகள், மூன்று அறுவை சிகிச்சை மையங்கள்,
இரண்டு அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் பல நோயறிதல் மற்றும் கண் சிகிச்சை மையங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரும், இவை அனைத்தும் சேர்ந்து சுமார் 330 படுக்கை கொண்ட வசதிகள் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனியார் சுகாதார சேவையை மிகவும் மலிவாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றும் நாராயண ஹெல்த் நிறுவனத்தின் குறிக்கோளுடன் இந்த கையகப்படுத்தல் பொருந்துகிறது என்று டாக்டர் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நிறுவனங்களும் வசதியானவர்களுக்கும் அல்லாதோருக்கும் பொதுவான சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் அணுகக்கூடிய தனியார் சுகாதார சேவையும் வழங்குகின்றன என்றார்.

இந்தியாவின் கிண்ணிகோலி பகுதியில் பிறந்த தேவி பிரசாத் ஷெட்டி, புகழ்பெற்ற இந்திய இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நாராயண ஹெல்த் நிறுவனர்.
நாராயண ஹெல்த்
இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை மலிவு விலையில் வழங்குவதில் அவர் பரவலாகப் பிரபலமானவர். 1992 ஆம் ஆண்டு, இந்தியாவில் முதல் முறையாக பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சையை செய்தார்.
அவரது மருத்துவ வாழ்க்கையில், 100,000 க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2002ல் பெங்களூருவில் நாராயண ஹெல்த் நிறுவனத்தை அவர் நிறுவினார்.

தற்போது இந்தியா முழுவதும் 21க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் செயல்படுவதுடன், கேமன் தீவுகளில் ஒரு சர்வதேச மருத்துவ வசதியும் செயல்பட்டு வருகிறது.
டாக்டர் ஷெட்டி பத்மஸ்ரீ (2004) மற்றும் பத்ம பூஷண் (2012) உள்ளிட்ட பல உயர் விருதுகளைப் பெற்றுள்ளார். அன்னை தெரசாவின் தனிப்பட்ட மருத்துவராகவும் டாக்டர் ஷெட்டி பணியாற்றினார். ஷெட்டியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரிய வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |