சந்தைக்கு சென்று குளிர்பானங்களை விற்றவர்... இன்று அவர் நிறுவனத்தின் மதிப்பு ரூ 7,000 கோடி
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பிரபலமான பல பொருட்களின் உருவாக்கத்திற்கு பெண்கள் பலர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
மிகவும் பிரபலமான
அப்படியான ஒருவர் ஜைனப் சௌஹான். இவரது நிர்வாகத்தின் கீழ் வளர்ந்த ஒரு நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ 7,000 கோடி. பிரபலமான தண்ணீர் போத்தல் மற்றும் குளிர்பான நிறுவனமான பிஸ்லேரியின் இயக்குநராக உள்ளார் ஜைனப் சௌஹான்.
ரமேஷ் மற்றும் ஜைனப் சௌஹான் தம்பதியின் மகளான ஜெயந்தி சௌஹான் தற்போது பிஸ்ரேலி நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். 1970 களில் தொடங்கி தம்ஸ்அப், லிம்கா மற்றும் கோல்ட் ஸ்பாட் போன்ற இந்தியாவின் மிகவும் பிரபலமான பிராண்டுகளுக்கு அடித்தளம் அமைப்பதில் ஜைனாப் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
மட்டுமின்றி, தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை சந்தைக்கு சென்று நேரிடையாக விற்பனை செய்த முதல் தொழிலதிபரும் ஜைனப் தான்.
பிஸ்லேரி நிறுவனம்
இந்தியாவில் கோகோ கோலாவுக்குப் பிறகு தம்ஸ்அப், லிம்கா மற்றும் கோல்ட் ஸ்பாட் பிராண்டுகளின் விற்பனையை உயர்த்திய பிறகு, அவர் வணிகத்திலிருந்து தமது கவனத்தை வேறு முயற்சிகளில் திருப்ப முடிவு செய்தார்.
பின்தங்கிய குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி செய்வதிலும், ஏழைகளுக்கு உணவளிப்பதிலும் அவர் கவனம் செலுத்த தொடங்கினார். அவரது கணவர் ரமேஷ் சௌஹான் தனது 27 வயதில் இந்திய சந்தையில் மினரல் வாட்டரை போத்தலில் அறிமுகப்படுத்தினார்.
தற்போது அவரது வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், பிஸ்லேரி நிறுவனம் பிரீமியம் நேச்சுரல் மினரல் வாட்டர் பிரிவில் Vedica என்ற பிராண்டை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |