உடல் முழுவதும் ரோமங்கள்… மக்கள் கல்லால் அடித்தும் தன்னம்பிக்கையை இழக்காத இளைஞர்!
இந்தியாவில் லலித் படிதார் என்ற இளைஞர் ஓநாய் தோற்றத்தை ஏற்படுத்தும் ஹைபர்டிரிகோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
50 ல் ஒருவர் லலித் படிதார்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் நாண்ட்லெட் என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயதான லலித் படிதார் என்ற இளைஞர் ஓநாய் தோற்றத்தை ஏற்படுத்தும் ஹைபர்டிரிகோசிஸ் (Hypertrichosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லலித் படிதாரின் முகம் முழுவதும் பரவி உள்ள முடிகள் புராண உயிரினமான ஓநாய் தோற்றத்தைக் கொண்டுள்ளது.
Hindistan’da “hipertrikoz” ya da halk arasında bilinen adıyla “kurt adam sendromu” hastalığıyla doğan Lalit Patidar’ın 17 yıllık yaşamından kareler pic.twitter.com/6hZX8Q4Dzk
— ?????????? (@HamdiCelikbas) November 19, 2022
இந்த பாதிப்பானது பூமியின் இடைக்காலத்தில் இருந்து வெறும் 50 பேருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது, அதில் இந்தியாவின் லலித் படிதாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லால் அடித்த மக்கள்
லலித் படிதார் இந்த நோய் பாதிப்பு குறித்து தெரிவித்த தகவலில், நான் மிகவும் சாதாரணமான குடும்பத்தை சேர்ந்தவன், எனது தந்தை ஒரு விவசாயி, சிறு குழந்தையில் இந்த பாதிப்பு குறித்து எந்தவொரு விழிப்பும் எனக்கு இல்லை, ஆனால் சிறிது வளர்ந்த பிறகு நான் மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுப்பட்டவன் என்று உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் என்னை சகமாணவர்கள் குரங்கு, குரங்கு என்று கூவி கிண்டல் செய்வார்கள், குழந்தைகளோ நான் கடித்து விடுவேன் என்று பயந்து ஓடுவார்கள், சிலர் என்னை பயங்கர விலங்கு என்று நினைத்து கல்லால் அடித்து துரத்திய நாட்களும் உண்டு என தெரிவித்துள்ளார்.
A 13 ans, Lalit Patidar est atteint du syndrome du "loup-garou" une maladie incurable caractérisée par un excès de poils sur le visage. pic.twitter.com/DywQtfspCn
— Golden News (@GoldenNewsOff) March 3, 2019
நான் இதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன், என் வாழ்க்கை நான் ஒருபோதும் விட்டு தர போவது இல்லை, நான் தொடர்ந்து முன்னேறுவேன் என தெரிவித்துள்ளார்.
ஹைபர்டிரிகோசிஸ் என்றால் என்ன?
ஹைபர்டிரிகோசிஸ் நோய் என்பது மனித உடல் பாகங்களில் அளவுக்கு அதிகமாக முடி வளர்வது ஆகும்.
இதனை இரண்டு வகைகளாக வகைப்படுத்துகின்றனர், முதல்வகை உடல் பாகம் முழுவதும் அதிகமான முடி வளர்வது, இரண்டாவது வகை சில குறிப்பிட்ட இடங்களை தவிர்த்து மற்ற பாகங்களில் அதிகமான முடி வளர்வது.
இந்த நோய் பெரும்பாலும் புராண உயிரினமான ஓநாயின் தோற்றத்தை ஏற்படுத்துவதால் இதனை ஓநாய் நோய் குறைபாடு (werewolf syndrome) என்றும் அழைக்கின்றனர்.
Lalit Patidar-லலித் படிதார்(mdwfeatures/Lalit Patidar)