உலக கோடீஸ்வரர் ரத்தன் டாடாவின் சகோதரர் இப்படியொரு வாழ்க்கையை வாழ்கிறாரா? ஆச்சரியம் தரும் தகவல்
ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி நாவல் டாடாவின் வாழ்க்கைமுறை பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் உள்ளது.
ரத்தன் டாடாவின் சகோதரர்
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக டாடா சான்ஸ் மற்றும் டாடா குரூப் உள்ளது. இதன் தலைவராக இருக்கும் ரத்தன் டாடா 85 வயதிலும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
ரத்தன் டாடாவை தெரிந்த அளவிற்கு அவரது சகோதரர் ஜிம்மி டாடாவைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவர் ஊடகங்களின் வெளிச்சம் படாமல் இருப்பதையே விரும்புபவர் ஆவார். சமூக ஊடகங்களிலும் அவர் இல்லை.
ஜிம்மி டாடா
மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய உறுப்பினராக உள்ள ஜிம்மி டாடாவுக்கும் பல கோடி ரூபாய் சொத்து உள்ளது.
எனினும், அவர் எளிமையான வாழ்க்கை முறையையே விரும்பும் நபராக இருப்பதால், மும்பையில் 2 படுக்கையறை கொண்ட வீட்டில் வசித்து வருகிறார்.
குறிப்பாக, இன்றைய சூழலிலும் அவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்பதும் மற்றொரு ஆச்சரிய தகவல் ஆகும்.
ரத்தன் டாடா இந்த ஆண்டின் துவக்கத்தில் தனது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அப்போது அவர் 1945ஆம் ஆண்டு ஜிம்மியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்தார்.
நேர்காணல்
மேலும், சமீபத்தில் ரத்தன் டாடா நேர்காணல் ஒன்றில் பேசும்போது, தங்கள் பெற்றோர் விவாகரத்து செய்த பின்னர் தாய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறினார்.
அத்துடன் அந்த காலகட்டத்தில் பாடசாலையில் தன்னையும், சகோதரர் ஜிம்மியையும் கேலி செய்வார்கள் என்றும், தங்களை சண்டையிட தூண்டிவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.