ஆகாஷ் என்னுடைய ராம்! ஈஷா எனக்கு தெய்வீக தாய்! மனம் திறந்த ஆனந்த் அம்பானி
ஆனந்த் அம்பானி இந்தியா டூடே-வுக்கு அளித்த பேட்டியில் தனது சகோதரர்கள் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி உடனான உறவைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆனந்த் அம்பானி
இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, அண்மையில் இந்தியா டூடே-வுக்கு அளித்த பேட்டியில், தனது மூத்த சகோதரர் ஆகாஷ் மற்றும் சகோதரி ஈஷா ஆகியோருடனான நெருக்கமான உறவைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அவர்களை வெறும் சகோதர, சகோதரியாக மட்டும் பார்க்காமல், ஆலோசகர்களாகவும், பாதுகாவலர்களாகவும் கருதுவதாக அனந்த் விவரித்துள்ளார்.
அத்துடன் இந்து மத காவியமான ராமாயணத்தை குறிப்பிட்டு சகோதரர் ஆகாஷ் அம்பானி எனக்கு கடவுள் ராமன் போன்றவர். சகோதரி ஈஷா தனது “தெய்வீக தாய்” போன்றவர் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் அவர்களை விட வயது குறைந்தவன் எனவே நான் அவர்களுடைய ஆஞ்சநேயர் என்றும் அந்த நேர்காணலில் ஆனந்த் அம்பானி கூறியுள்ளார்.
மேலும் தங்களிடையிலான சகோதர உறவு போட்டியாக இல்லாமல், பரஸ்பரமான ஆதரவுடன் உறுதியான பசை(Feviquick) கொண்டு ஒட்டியுள்ளோம்.
ஆனந்த் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் இந்த பேட்டி அமைந்துள்ளது.
ஆனந்த் அம்பானியின் இந்த பேட்டி, அம்பானி குடும்பத்தினர் இடையேயான வலுவான குடும்ப பந்தத்தை வெளிப்படுத்துகிறது.
அவர்களது செல்வ செழிப்பு மற்றும் சமூக அந்தஸ்து இருந்தபோதிலும், சகோதர, சகோதரி இடையே இருக்கும் ஆதரவான மற்றும் அன்பான உறவை இது சித்தரிக்கிறது.
You May Like This Video