நீதா அம்பானி, ரோஷ்னி நாடார்... சொத்து மதிப்பு எவ்வளவு? முத்திரை பதிக்கும் பெண்கள்
வணிக உலகை ஆண்கள் மட்டுமே காலம் காலமாக ஆண்டு வரும் நிலையில், நீதா அம்பானி, சுதா மூர்த்தி முதல் ரோஷ்னி நாடார் வரை பெண்கள் பலரும் சம காலத்தில் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர்.
ரோஷ்னி நாடார் MBA பட்டதாரி
அந்த வரிசையில், தற்போது அவர்களின் கல்வி தகுதி, சொத்து மதிப்பு உள்ளிட்ட தரவுகள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக சுதா மூர்த்தி உள்ளார்.
நாராயண் மூர்த்தியை திருமணம் செய்வதற்கு முன்பு, சுதா குல்கர்னி 1951ல் கர்நாடகாவின் ஹாவேரியில் கன்னடம் பேசும் குடும்பத்தில் பிறந்தார். கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அவருக்கு, 2023ல் இந்திய அரசால் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.
அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.775 கோடி என கூறப்படுகிறது. HCL நிறுவனங்களின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான ரோஷ்னி நாடார் MBA பட்டதாரி என்பதுடன் ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பிலும் உள்ளார்.
2022ல் இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.84,330 கோடி என்றே கூறப்படுகிறது. ஆசியாவிலேயே பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிகர மதிப்பு ரூ.6.4 டிரில்லியன்
தற்போது ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனராகவும் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். வெளியான தரவுகளின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிகர மதிப்பு ரூ.6.4 டிரில்லியன் என்றே கூறப்படுக்கிறது.
பயோகான் லிமிடெட் மற்றும் பயோகான் பயோலாஜிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் நிறுவனர் மற்றும் செயல் தலைவராக உள்ளார் கிரண் மஜும்தார்-ஷா. இவரது நிகர சொத்து மதிப்பு 2.4 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
கோத்ரேஜ் குடும்பத்தை சேர்ந்த ஸ்மிதா கிருஷ்ணா-கோத்ரேஜ் மும்பை புனித சேவியர் கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் பி.ஏ. பட்டம் பெற்றவர். இவரது நிகர சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டொலர் என்றே தெரியவந்துள்ளது.
மருத்துவரான ரேஷ்மா கேவல்ரமணி வணிகத்துறையிலும் களமிறங்கி சாதித்து வருகிறார். 1988ல் அமெரிக்கா சென்ற இவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் 7 ஆண்டு பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவரது Vertex pharmaceuticals நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு 65.6 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |