இந்திய குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்... காணாமல் போயிருக்கிறார்கள்: இது ஒரு இனப்படுகொலை என்கிறார் கனேடிய சட்டத்தரணி
கனடாவில் நூற்றுக்கணக்கான பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயத்தால், நாடே பரபரப்படைந்துள்ளது. இந்த நேரத்தில், இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள பூர்வக்குடியின சட்டத்தரணியான Eleanore Sunchild, கனடா இப்போதுதான் கொல்லப்பட்டவர்கள் போக மீதம் தப்பிப் பிழைத்தவர்கள் சொல்வதை கவனிக்கத் தொடங்கியுள்ளது என்கிறார்.
அந்த கொடூரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்குத்தான் நடந்த கோரங்கள் தெரியும். ஏராளம் துஷ்பிரயோகங்கள், பயங்கர பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள், சாவுகள், கொலைகள்... எல்லாம் இனிதான் வெளியே வரும் என்று கூறும் Eleanore, Kamloopsஇல் நாம் கேள்விப்பட்டது உண்மையாகவே துயரம், ஆனால், அதேபோல இன்னும் நிறைய இருக்கிறது என்கிறார்.
என்னைப் பொருத்தவரை, இது ஒரு இனப்படுகொலை என்று கூறும் Eleanore, இது ஒரு கலாச்சார இனப்படுகொலைக்கும் மேலானது என்கிறார். இந்திய குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், காணாமல் போயிருக்கிறார்கள். இனி எல்லா உண்மையும் வெளிவரும் என்கிறார்.
இந்த செய்தி, நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி, இப்படிப்பட்ட கோரங்களிலிருந்து தப்பி மீண்டும் சமுதாயத்துக்கு திரும்பி வாழ்ந்து வரும் பூர்வக்குடியினரை, மீண்டும் திகிலடைய வைத்துள்ளது என்று கூறும் Eleanore, நாடு தங்களுக்கு என்ன செய்துள்ளது என்பதை மக்கள் உணரும் நேரம் இது என்கிறார்.
இனப்படுகொலை நிகழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன, இதை அலட்சியப்படுத்துவது கடினம் என்கிறார் அவர்.