கனடாவில் பலருக்கு உதவினேன்... ஒப்புக்கொண்ட இந்தியர்: நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு
ஒன்ராறியோவில் வசித்து வந்த இந்தியர் ஒருவர், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஆட்களை கடத்திய குற்றத்தில் தண்டனை பெற்றுள்ளார்.
நாடுகடத்தவும் முடிவு
அமெரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தண்டனை அறிவித்ததுடன், தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் அவரை நாடுகடத்தவும் முடிவு செய்துள்ளது.
@cnn
40 வயதான சிம்ரஞ்சித் சிங் கடந்த 2022 ஜூன் மாதம் ஒன்ராறியோவில் கைதானார். தொடர்ந்து மார்ச் மாதம் விசாரணை நிமித்தம் அமெரிக்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் 250,000 டொலர் அபராதமும் அமெரிக்க நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
1,000 பேர்களை கடத்தியதாக
நீதிமன்ற விசாரணையில் 2020 மார்ச் தொடங்கி 2021 மார்ச் வரையில் கனடாவில் இருந்து பல எண்ணிக்கையிலான இந்தியர்களை அமெரிக்காவுக்கு கடத்தியதாக சிம்ரஞ்சித் சிங் ஒப்புக்கொண்டுள்ளார்.
@cnn
மட்டுமின்றி, ஒவ்வொருவரிடமும் 5,000 முதல் 35,000 டொலர் வரையில் கட்டணமாக வசூலித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்கா அல்லது கனடாவுக்கு சட்டவிரோதமாக இதுவரையில் 1,000 பேர்களை கடத்தியதாகவும் சிம்ரஞ்சித் சிங் தமது வாடிக்கையாளர் ஒருவரிடம் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆட்களை கடத்த கார்ன்வால் தீவு மற்றும் Akwesasne பிராந்தியத்தை சிம்ரஞ்சித் சிங் பயன்படுத்தியுள்ளார். இப்பகுதியானது கியூபெக் மற்றும் நியூயார்க் இடையே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |