11 ஆண்டுகள் காத்திருந்து காதலியைக் கரம்பிடித்த நபர்: கேலி பேசும் இணையம்
ஒருவர் தான் 11ஆண்டுகளாக காதலித்துவந்த தன் காதலியை கரம்பிடித்த மகிழ்ச்சியில் இருக்க, அந்த ஜோடியின் புகைப்படத்தைக் கண்ட இணையம் தனது மோசமான முகத்தைக் காட்டியுள்ளது.
இணையத்தின் மோசமான முகம்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ரிஷப் ராஜ்புத் மற்றும் ஷோனாலி சௌக்சே ஆகிய இருவரும் 11 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், சமீபத்தில் திருமணம் செய்துவந்தனர்.

அவர்களுடைய திருமண புகைப்படங்கள் சமூக ஊடகம் ஒன்றில் வெளியான நிலையில், ராஜ்புத்துடைய நிறம் குறித்து பலர் மோசமாக கேலி செய்துள்ளனர்.
sorry rishabh bhai 🙏🏻
— anon (@perpetuallonerX) November 28, 2025
so happy that you got married to the woman who has been there for you through thick n thin!! god bless you man 🧿 pic.twitter.com/qIaIZ8GZz1
கருப்பு நிறம் கொண்ட ராஜ்புத்தை, அவரது பணத்துக்காக ஷோனாலி திருமணம் செய்துகொண்டதாக சிலர் விமர்சிக்க, சகோதரி உங்களுக்கு இது தேவையா என்றே சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
மாப்பிள்ளை அரசு வேலை செய்பவராக இருக்கலாம் என ஒருவர் கூற, காதல் திருமணமாக இருக்கலாம் என்கிறார் மற்றொருவர்.
இப்போதெல்லாம், சொந்த வாழ்வில் நடக்கும் முக்கிய தருணங்களை எல்லாம் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள் பலர்.
பிரபலங்கள்தான் அப்படி என்றால், சாதாரண மக்களும் இப்படி எல்லா விடயங்களையும் பகிர்ந்துகொள்ளத் துவங்க, வாழ்வில், முக்கியமான, இனிமையான ஒரு நாள் இதுபோல் கேலிக்கு கிண்டலுக்கும் ஆளாவதும் சில நேரங்களில் நடந்துவிடத்தான் செய்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |