வார இறுதியில் நாடுகடத்தப்படும் அச்சத்தில் இந்திய தம்பதியர்: அமைச்சர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்
கனடாவில் வாழ்ந்துவரும் வயது முதிர்ந்த ஒரு இந்திய தம்பதியர் இந்த வார இறுதியில் நாடுகடத்தப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்களது ஆதரவாளர்கள் கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் அலுவலகம் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னணி
இந்தியர்களான Rajvinder Kaurம் Randhir Singhம் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கனடாவில் தங்கியுள்ளார்கள். போராளிக் குழு ஒன்றுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறி இந்திய பொலிசார் Randhir Singhஐக் கைது செய்து சித்திரவதை செய்ததால், தம்பதியர் கனடாவுக்கு தப்பிவந்ததாக கூறப்படுகிறது.
தம்பதியரின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்படவே, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
இந்த வார இறுதியில், அதாவது, சனிக்கிழமை அவர்கள் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளதால், தற்காலிக குடியிருப்பு அனுமதியளிக்குமாறு அவர்கள் கனடாவின் புதிய புலம்பெயர்தல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Marc Millerஐ கோரியுள்ளார்கள்.
அமைச்சர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், தம்பதியருக்கு ஆதரவாக அமைச்சர் வீட்டின் முன் கூடிய சிலர், கனடாவில் தங்க தம்பதியருக்கு அனுமதியளிக்குமாறு கோரி குரல் கொடுத்துள்ளார்கள்.
இந்தியாவுக்குத் திரும்பினால் Randhir Singh மீண்டும் சித்திரவதைக்குள்ளாவார் என்று கூறுகிறார்கள் அவர்கள்.
ஒரு அகதிக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமானால் எப்படிப்பட்ட ஒரு மோசமான நிலைமை ஏற்படவேண்டும் என்கிறார் ஆதரவாளர் ஒருவர்.
இதற்கிடையில் கடும் மன அழுத்தத்துக்குள்ளான Randhir Singh, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். நான் இந்தியாவுக்கு திரும்பிப் போனால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள், ஆகவே இந்தியாவுக்கு போவதைவிட, நானே தற்கொலை செய்துகொள்கிறேன் என்கிறாராம் Randhir Singh.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |