சுவிஸ் சுற்றுலா சென்ற இந்திய தம்பதியர் மீது தாக்குதல்
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு இந்திய தம்பதி சீன ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அந்த ஹொட்டல் ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
சுவிஸ் சுற்றுலா சென்ற இந்திய தம்பதியர் மீது தாக்குதல்
கனடாவில் வாழும் இந்தியர்களான கரண் மற்றும் நிகிதா தம்பதியர் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், Seehotel Schwert என்னும் ஹொட்டலில் தங்கியிருந்திருக்கிறார்கள்.
அந்த ஹொட்டலில் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் இந்திய மதிப்பில் 28,000 ரூபாய் முதல் 42,000 ரூபாய் வரை ஆகும்.
அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் ஏசி இல்லாததால் ஃபேன்கள் கேட்டுள்ளார்கள் தம்பதியர். ஃபேன்கள் கொடுக்கப்பட்ட நிலையில், பின் இவர்களிடம் கேட்காமலே ஊழியர் ஒருவர் ஃபேனை எடுத்துச் சென்றுவிட்டாராம்.
அவர்கள் மீண்டும் ஃபேனை கேட்க, அவர் இவர்களை முட்டாள் என திட்டியதாகவும், அதைத் தொடர்ந்து பின்னரும் அந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதை நிகிதா மொபைலில் வீடியோ எடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஊழியர் நிகிதாவின் மொபைலைப் பறித்ததுடன் அவரையும் கரணையும் தாக்கியதாகவும், கனமான செராமிக் மக் ஒன்றை தூக்கி நிகிதா மீது வீசியதாகவும், அதில் அவரது பல் ஒன்று உடைந்ததுடன், தாடையும் சேதமடைந்துள்ளதாகவும், மீண்டும் அவரது தாடை முழுமையாக சரியாக செயல்படாது என மருத்துவர்கள் கூறியதாகவும் தம்பதியர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், கரண், நிகிதா தம்பதியம் ஆரம்பம் முதலே முரட்டுத்தனமாக நாட்ந்துகொண்டதாகவும், 60 வயது ஊழியர் ஒருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும் ஹொட்டல் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்காப்புக்காக அவர் ஒரு கப்பை எடுத்து வீசியதாகவும் அது நிகிதாவை தாக்கிவிட்டதாகவும் ஹொட்டல் ஊழியர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால், வெள்ளையர்களையும் ஜேர்மன் மொழி பேசியவர்களையும் அந்த ஹொட்டல் ஊழியர்கள் மரியாதையுடன் நடத்தியதாகவும், தங்களை மட்டுமே மோசமாக நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார் நிகிதா.
இந்த விடயம் தொடர்பில் பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளதாக கரண் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |