இப்படி ஒரு அணியை ஏன் தெரிவு செய்தீர்கள்? இந்திய கிரிக்கெட் வாரியத்தை விளாசும் ரசிகர்கள்
ஆசியக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி பலவீனமாக தெரிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27ஆம் திகதி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
அதில் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெறவில்லை. ஆனால் அனுபவ வீரரான முகமது ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அதேபோல் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச போட்டிகளில் சொதப்பி வரும் ஆவேஷ்கானுக்கும், அர்ஷ்தீப் சிங்கிற்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
india.postsen
அனுபவமில்லாத இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி அழுத்தமான சூழ்நிலைகளை ஒரு பெரிய தொடரில் எதிர்கொள்வார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புவனேஷ்வர்குமார் என்ற ஒருயொரு அனுபவ வேகப்பந்து வீச்சாளரை மட்டும் வைத்து எப்படி இந்திய அணி விளையாடப் போகிறது என ரசிகர்கள் சிலர் கலக்கமடைந்துள்ளனர். மேலும் எதுவுமே செய்யாத தீபக் சாஹர் எப்படி அணிக்குள் வந்தார் என்றும் வினவியுள்ளனர்.
?#TeamIndia squad for Asia Cup 2022 - Rohit Sharma (Capt ), KL Rahul (VC), Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, R Pant (wk), Dinesh Karthik (wk), Hardik Pandya, R Jadeja, R Ashwin, Y Chahal, R Bishnoi, Bhuvneshwar Kumar, Arshdeep Singh, Avesh Khan.
— BCCI (@BCCI) August 8, 2022