1000ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா! மாபெரும் சாதனை
1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அணி என்ற மகத்தான சாதனையை படைக்கவுள்ளது இந்தியா.
இந்தியா- மேற்கிந்திய அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற 6ம் திகதி தொடங்கவுள்ளது.
இதில் முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா தனது 1000வது ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளது.
இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தியா இதுவரை மொத்தம் 999 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 518 ஆட்டங்களில் வெற்றி பெற்று 431 தோல்விகளை சந்தித்துள்ளது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமைப்பட வேண்டுமென சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Many congratulations to #TeamIndia & @BCCI for this monumental milestone of 1000 ODIs!
— Sachin Tendulkar (@sachin_rt) February 4, 2022
It’s been a wonderful journey all these years for players, fans & everyone associated with the game. pic.twitter.com/VqlsVlQOQy