யுவராஜ் சிங்கிற்கு பிறகு இந்தியாவிற்கு யாருமே அதை செய்யவில்லை! ரோஹித் சர்மா கவலை
யுவராஜ் சிங்கிற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் 4வது இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எந்தவொரு வீரராலும் முடியவில்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
நெருங்கும் உலக கோப்பை
ஐசிசி 2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ம் திகதி தொடங்கி நவம்பர் 19ம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக முன்னணி அணிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருவதுடன், உலக கோப்பை தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அக்டோபர் 5ம் திகதி தொடங்க உள்ள 50 ஓவர் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளனர்.
அக்டோபர் 8ம் திகதி நடைபெறும் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ளன.
ரோஹித் சர்மா கவலை
உலக கோப்பை தொடர் ஆரம்பிக்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய கவலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், யுவராஜ் சிங்கிற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் 4வது இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எந்தவொரு இந்திய கிரிக்கெட் வீரராலும் முடியவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த 4வது வீரருக்கான இடத்தை ஸ்ரேயஷ் ஐயர் சிறப்பாக நிரப்பினார், ஆனால் அவரும் தற்போது காயமடைந்து விட்டார்.
எனவே அந்த இடத்தில் சிறப்பாக விளையாட கூடிய புதிய வீரரை விரைவாக கண்டுபிடித்தாக வேண்டும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |