இந்திய கிரிக்கெட் அணிக்கு 60 சதவீத அபராதம்! ஐசிசி அதிரடி நடவடிக்கை
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வெற்றி
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் ஐதராபாத்தில் நடந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
@R Senthil Kumar
விதி மீறல்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதிமுறை மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான விதி 2.22-யை இந்திய அணி மீறியுள்ளது.
கள நடுவர்கள் மற்றும் மூன்றாம், நான்காம் நடுவர்களின் குற்றச்சாட்டை இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா ஏற்றுக் கொண்டார்.
எனவே இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த தேவையில்லை என முடிவு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
@PTI picture