இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு எச்சரிக்கை!
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்துக்காக அடுத்த 6 மாதத்தில் ராகுல் டிராவிட் செய்ய வேண்டிய விடயம் தொடர்பில் ரவி சாஸ்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு இது போதாத காலமா என தெரியவில்லை! ஏனெனில் கடந்த அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடரில் தோற்றது, கோலியின் விலகல், தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் மோசமான தோல்வி என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.
இந்திய அணியின் இந்த சொதப்பல்களால் ராகுல் டிராவிட்டின் பயிற்சி மீது ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் பிரச்சினையை சரிசெய்ய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுறைகளை கூறியுள்ளார். அதில், இந்திய அணிக்கு அடுத்த 8 - 10 மாதங்கள் மிக மிக முக்கியமான காலக்கட்டம் ஆகும்.
இந்த சமயத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்வது அவசியமாகிறது. அவர்கள் அடுத்த 4 - 5 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் தூணாக இருக்க வேண்டும். செய்தே தீர வேண்டும் என்னை பொறுத்தவரையில் சீனியர்கள் மற்றும் இளம் வீரர்கள் கலந்த அணியே சிறப்பாக இருக்கும்.
அணியின் எதிர்காலத்திற்காக சில சமயங்களில் முக்கிய மாற்றங்களை செய்து தான் ஆக வேண்டும். அப்படிபட்ட காலம் தான் தற்போது. அடுத்த 6 மாதத்திற்கு இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் இன்னும் பழைய அணியையே நம்பிக்கொண்டிருந்தால், பின்னர் அணியை சரி செய்வது கடினமாகி விடும் என ரவிசாஸ்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.