ஒரு வெற்றியால் மிரட்டலான சாதனைகளை படைத்த இந்திய அணி!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம், இந்திய அணி முக்கிய சாதனைகளை படைத்துள்ளது.
டிரினிடாட்டில் நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியின் மண்ணிலேயே அந்த அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
கடந்த 1983ஆம் ஆண்டு முதல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி, பலமுறை ஒயிட்வாஷ் செய்துள்ளது. ஆனால் தற்போது தான் முதல் முறையாக சொந்த மண்ணில் முழுமையாக தொடரை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
மேலும், இதே ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி, மீண்டும் ஒருமுறை ஒயிட்வாஷ் செய்து மற்றோரு சாதனையையும் படைத்துள்ளது.
PC: Twitter
இதற்கு முன்பு ஜிம்பாவே அணி வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு முறையும், கென்யாவுக்கு எதிராக வங்கதேச அணி இரண்டு முறையும் ஒரே ஆண்டில் ஒயிட்வாஷ் செய்திருந்தன. அந்த சாதனைப் பட்டியலில் இந்தியா மூன்றாவது அணியாக இணைந்துள்ளது.
இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 13வது முறையாக ஒயிட்வாஷ் செய்துள்ளது. அயல்நாட்டு மண்ணில் இது 5வது முறையாகும். விராட் கோலி, ரகானே, தோனி ஆகிய கேப்டன்களின் வரிசையில் ஷிகர் தவானும் ஒயிட்வாஷ் செய்த கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
PC: AFP